நான் சமூக பணி படித்து முடித்து ( 2019 )  தமிழக கத்தோலிக்க  நலவாழ்வு  சங்கத்தில்  சமூக நலவாழ்வு  திட்டத்தில்  சமூக  பணியாளராக இணைந்தேன் . இந்த  திட்டத்தில்  நான்  பணிசெய்ய  வேண்டி இடங்கள்  கருமாத்தூர்,  உசிலம்பட்டி , விக்கிரமங்கலம்,  முருகத்தூரான்பட்டி , தேனி மற்றும்  வருசநாடு.  ஒவ்வொரு  இடங்களில்  திட்டத்தின்   நலவாழ்வு பணியாளர்  இருப்பார்கள் .   நான் பணிக்கு சேர்ந்த உடன்  நடத்திய  முதல்  நலவாழ்வு  பணியாளர் கூட்டத்தில்  பல்வேறு  விஷயங்கள்  பேசப்பட்டது , அதில் ஒரு பணியாளர் என்னிடம்  ஒரு நிகழ்வை பகிர்ந்து  கொண்டார்  , அது என்னவென்றால்   திண்டுக்கல்  மாவட்டம்  சித்தரேவு பஞ்சாயத்துக்கு ( தாண்டிக்குடி  செல்லும்  வழி)  உட்பட்ட  பகுதியில்  மின்சார   வசதி கிடைக்காமல்   வாழ்ந்து  வந்த  ஒரு குடும்பத்தை  பற்றி  பகிர்ந்து  கொண்டார்,  அதனை கேட்டதும்  ஒரு அதிர்ச்சி  மேலும்  அவர்களை பார்க்க  வேண்டும்  என  ஆர்வத்தையும்  தூண்டியது.  நான் அந்த  பணியாளரிடம் என்னால்  முயன்ற முயற்சி  எடுப்...