உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் கொண்டு வரப்பட்ட திட்டம்.
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்(AB-PMJAY), மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் ( CMCHIS) ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இத்திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (மே 2023) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
உயர் அறுவை சிகிச்சைகளான காது நுண் நரம்பியல் அறுவை சிகிச்சை( காக்ளியர் இம்ப்ளான்ட் ) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லிரல் மற்றும் நுரையிரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சமாக தனி நபர்க்கு 22 லட்சம் வரை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதி மற்றும் வழிமுறைகள்
இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் 1,20,000-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும் மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச்சான்று பெற்று இருக்கு வேண்டும்.
வருமானச் சான்று, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையுடன் ( அசல் மற்றும் நகல்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை கொடுத்த பிறகு மாவட்ட கியோஸ்க் ஆப்ரேட்டர் மேற்கண்ட ஆவணங்களை சரிபார்த்து , ஆவணங்களையும் மற்றும் கைரேகையை பதிவு செய்து. புகைப்படம் எடுத்த பின்பு . முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மின்அட்டையை( e-card) உடனே வழங்குவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வருமானச் சான்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . மேலும் மன நோயினால் பாதிப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு காப்பீட்டு அட்டை பெறுவதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இலவச உதவி எண் 1800 425 3993 அழைக்கவும்.
திட்டத்தை பற்றிய தகவல்கள்
இத்திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் , பரிசோதனை மையங்களின் தொடர்பு எண்கள் மற்றும் அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் பற்றிய தகவல்கள் www.cmchistn.com என்ற இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மருத்துவ சிகிச்சைக்கும் எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாவட்டம் வாரியாக ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்பு எண்களும் மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இலவச உதவி எண் 1800 425 3993 அழைக்கவும்
இத்திட்டத்தில் கீழ் சிகிச்சை பெற்ற பயனாளிகள் மருத்துவமனை தனக்கு அளித்த சிகிச்சையை பற்றி விவரங்களை www.cmchistn. com என்ற இணையதளத்தில் காணலாம். குறிப்பாக இத்திட்டத்தில் வாயிலாக சிகிச்சைக்கு மருத்துவமனை எடுத்து கொண்ட தொகை பற்றிய விவரங்களை இணையதள முகவரியில் காணலாம்
தொடர்புக்கு
இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம்
7402335113/8838814481
.




Comments
Post a Comment