இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. அதில் குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கோவில் அருகே சர்க்கஸ் நிகழ்ச்சியை அரங்கேற்றி கொண்டு இருந்தனர். குறிப்பாக ஒரு சிறுமி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருந்தார். ஒவ்வொரு சர்க்கஸின் முடிவில் மக்கள் அனைவரும் சிறுமியின் திறமையை ( சர்க்கஸ்) பார்த்து வியந்து பாராட்டி சிறுமிக்கு பணமாகவும் திண்பண்டங்களையும் வழங்கினார்கள்.
ஒவ்வொரு சர்க்கஸின் முடிவில் சிறுமிக்கு பல்வேறு நபர்கள் நூறு மற்றும் இருநூறு ரூபாய் கொடுக்கும் போது சிறுமி எந்தவித மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை, பின்பு சிறுமி தன்னுடைய தாயிடம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு அருகில் இருக்கும் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைக்கு சென்று விளையாட்டு பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியாக ஓடிவந்து அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்தார். இதே போல் ஒவ்வொரு முறையும் சிறுமி சர்க்கஸ் முடித்த பிறகு விளையாட்டு பொருட்களை வாங்கி கொண்டே இருந்தார். நானும் அந்த சிறுமியோடு பின் சென்று சிறுமிக்கு விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து நானும் மகிழ்ந்தேன். நான் சிறுமியிடம் சிறிது பேசி பார்த்த போது சிறுமி சென்னையில் வசிப்பதாகவும் மேலும் 5ம் வகுப்பு படிப்பதாகவும் கூறினார். நான் சிறுமியின் திறமையையும் மற்றும் சிறுமியின் மனநிலையையும் ஆவணப்படுத்த விரும்பினேன்
சிறுமிக்கு மக்கள் நிறைய பணத்தை கொடுத்த போதும் மகிழாத சிறுமி அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கி கொண்டு விளையாட்டு பொருட்களை வாங்கியவுடன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார்.
தொடர்புக்கு
இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம்
VRD 18, பால் டிப்போ அருகில்
தளவாய்புரம்
பதிவு எண்: BK4/3/2023
வரி விலக்கு : 12A/80G
தொடர்புக்கு : 7402335113/8838814481
Comments
Post a Comment